வயநாடு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் விலகல்: பாஜகவில் இணைந்ததால் ராகுல் காந்தி அதிர்ச்சி..!

Siva

ஞாயிறு, 21 ஏப்ரல் 2024 (08:30 IST)
ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திடீரென காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவர் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் அவருக்கு வயநாடு தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் உதவியாக இருந்து வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் திடீரென வயநாடு தொகுதி பொதுச்செயலாளர் சுதாகரன் என்பவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதாகவும் அவர் பாஜகவில் இணைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வயநாடு பொதுச்செயலாளர் சுதாகரன் என்பவர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

நான் வயநாடு பொதுச் செயலாளராக இருந்த நிலையில், ராகுல் காந்தி இந்த தொகுதியில்தான் போட்டியிட்டாலும் அவரை என்னால் அணுகவே முடியவில்லை. கட்சியின் பொதுச் செயலாளருக்கே இப்படி என்றால், சாதாரண மக்கள் எப்படி ராகுல் காந்தியை அணுக முடியும் என்று யோசித்தேன். ராகுல் காந்தி மீண்டும் இந்த தொகுதி எம்பி ஆனால் வயநாட்டின் வளர்ச்சி முற்றிலுமாக பாதிக்கப்படும் என்பதால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்