நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய மனுவை விசாரிக்க மறுப்பு..

Webdunia
திங்கள், 22 ஜூலை 2019 (11:12 IST)
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தகோரி இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம். 

கர்நாடகாவில் 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், குமாரசாமி அரசின் பெரும்பான்மை குறைந்துள்ளது என எதிர்கட்சியினரால் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு கூடிய சட்டசபையில் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசின் எம்.எல்.ஏக்களுக்கும், பாஜக உறுப்பினர்களுக்கும் நடந்த அமளியால் நம்பிக்கை வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்கள், நம்பிக்கை வாக்கெடுப்பை 5 மணிக்குள் நடத்தகோரி அளிக்கப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுத்ததாக ஒரு செய்தி வெளியானது. நாளையாவது வழக்கை விசாரிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியதற்கு “பார்க்கலாம்” என பதிலளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்