விஐபி தரிசனம் ரத்து: திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 18 மே 2023 (14:12 IST)
கோடை விடுமுறை காரணமாக திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதை அடுத்து மூன்று நாட்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 
 
திருப்பதியில் உள்ள திருமலை ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதும் குறிப்பாக கோடை விடுமுறை நேரத்தில் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் எண்ணிக்கை  அதிகரித்து வருவதாகவும் இதன் காரணமாக சுமார் 30 மணி நேரம் நீண்ட வரிசையில் இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
இந்த நிலையில் பக்தர்கள் வருகை அதிகம் இருப்பதன் காரணமாக விஐபி தரிசனம் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்