அதிநவீன சூப்பர் பைக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்திய கிராம மக்கள்

புதன், 10 ஜனவரி 2018 (14:22 IST)
பெங்களூர் அருகே கேடிஎம் பைக் ஒன்று மோதி சிறுமி பலியானதை அடுத்து அந்த வழியாக வந்த சூப்பர் பைக்குகளை வழிமறித்து கிராம மக்கள் தக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
விடுமுறை நாட்களில் பெங்களூரைச் சேர்ந்த இளைஞர்கள் நந்தி ஹில்ஸ் மலைப்பகுதிக்கு செல்வது வழக்கம். கடந்த ஞாயிற்று கிழமை கேடிஎம் பைக்கில் பயணித்த இளைஞர் ஒருவர் தேவனஹள்ளியை கடந்து ஆவதி என்ற பகுதியில் சென்றுக்கொண்டிருந்த போது சாலை கடந்த முயன்ற 11வயது சிறுமி மீது மோதியதில் சிறுமி உயிரிழந்தார்.
 
இதையடுத்து அங்கு கூடிய அப்பகுதி மகள் பைக்கில் வந்த இளைஞரை கடுமையாக தாக்கியுள்ளனர். பைக்கையும் அடித்து உடைத்துள்ளனர். மேலும் அவ்வழியே வந்த சூப்பர் பைக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வழியாக செல்லும் இளைஞர்கள் அதிவேகமாக செல்வதால் கோபத்தில் இருந்த கிராம மக்கள் விலை உயர்ந்த பைக்குகளை பிடித்து அடித்து நொறுக்கினர்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுத்த முடியாத சூழல் நிலவியது. 
 
இதையடுத்து விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் அந்த வழியை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்