கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கைலசிபால்யா பகுதியில் காய்கறி சந்தை அருகே உள்ள கும்பாரா சங் என்ற கட்டிடத்தின் கீழ் தளத்தில் மதுபான விடுதி இயங்கி வந்தது. மதுபான விடுதியில் பணிபுரியும் ஊழியர்கள், அந்த கட்டிடத்திலேயே தங்குவது வழக்கம். இந்நிலையில், இன்று அதிகாலை 2.30 மணியளவில் விடுதியில் இருந்து கரும்புகை வெளியானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிலர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.