வேளாண் சட்டத்தை ரத்து செய்யாவிட்டால் விருது ரிட்டர்ன்! – குத்துச்சண்டை வீரர் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 6 டிசம்பர் 2020 (16:34 IST)
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வரும் நிலையில் சட்டத்தை ரத்து செய்யாவிட்டால் மத்திய அரசின் விருதை திரும்ப அளிப்பதாக குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர். இன்றுடன் 11 நாட்களாக தொடரும் இந்த போராட்டத்தில் மத்திய அரசும் முடிந்த அளவு விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. எனினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் நாடு முழுவதும் வரும் 8ம் தேதி பந்த் நடத்த இருப்பதாக விவசாயிகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ள இந்திய அரசின் கேல் ரத்னா விருது பெற்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்திர சிங், வேளாண் சட்டங்களை திரும்பபெறாவிட்டால் தனக்கு அளிக்கப்பட்ட கேல் ரத்னா விருதை திரும்ப அளிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்