கடன்பாக்கிகளை மறந்து ஜாலியாக ஐபிஎல் ஆட்டம் பார்த்த விஜய் மல்லையா- விடியோவை பாருங்க

Webdunia
புதன், 1 ஜூன் 2016 (12:29 IST)
`கிங் பிஷர்’ மதுபான ஆலை அதிபர் விஜய் மல்லையா பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் 9 ஆயிரத்து 600 கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, அதைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு ஓடி விட்டார்.


 

தற்போது அவர் இங்கிலாந்தில் இருக்கிறார். அவரை இந்தியா வரவழைக்கவும், அவரிடம் கடனை வசூலிக்கவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு உரிய பலன் கிடைக்கவில்லை. இ ந் நிலையில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சன் ரைசர்ஸ் அணியுடன் மோதி ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தை  விஜய் மல்லையா தனது மகனுடன் பார்த்து ரசித்துள்ளார்.  அந்த காட்சிகளை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவேற்றியும் உள்ளார்.

விஜய் மல்லையாவை நாடு கடத்த வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்தது. ஆனால் இங்கிலாந்து அதனை நிராகரித்தது. இ ந் நிலையில் தானது வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது இந்தியாவை ஏளனம் செய்யும் வகையில் உள்ளது என சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

 
அடுத்த கட்டுரையில்