ராஜஸ்தான் மாநிலம் சவைமாதொபர் என்ற பகுதியில் உள்ள ரான்தென்போர் தேசிய பூங்காவில் இன்று இரண்டு ஆண்புலிகள் பயங்கரமாக மோதிக்கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சவை மாதொபர் என்ற பகுதியில் உள்ள ரான்தென்போர் தேசிய பூங்காவுக்கு கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி ஒரு சுற்றுலாப் பயணி சென்றுள்ளார். அப்போது இரண்டு புலிகள் கடுமையாக ஒன்றை ஒன்று தாக்கி ஆக்ரோஷ்மாக சண்டை போட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடந்தார். அதன் பின்னர் தனது மொபைல் போனில் அதை வீடியோ எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் இந்திய வனத்துறை அதிகாரி பிரவீன் காஷ்வான் இந்த வீடியோவை வெளியிட்டு அதில் பதிவிட்டுள்ளதாவது : இந்த புலிகள் தங்களின் எல்லைகளுக்காக போராடும்... இந்த இரண்டு சகோதர்களும் அப்படியே போராடு கொன்றன.. ஆனால் இந்தப் புலுகளுக்கு இடையேயான சண்டை கொடூரமாக வன்முறையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.