மெட்ரோ ரயில்களில் வீடியோக்கள் எடுக்க தடை: அதிரடி அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2023 (17:38 IST)
இந்தியாவில் சென்னை உள்பட பல முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் மெட்ரோ ரயில்களில் மொபைல் போன் மூலம் வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இது குறித்து டெல்லி மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் டெல்லி மெட்ரோ ரயில்களில் இன்ஸ்டா ரீல்ஸ் உள்ளிட்ட வீடியோக்கள் எடுக்க தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த தடை விதிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 
 
டெல்லி மெட்ரோ நிர்வாகத்தை அடுத்து சென்னை உள்பட மற்ற நகரங்களில் உள்ள மெட்ரோ ரயில்களிலும் விரைவில் இதுபோன்ற அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
மெட்ரோ ரயில்களில் செல்லும் ஒரு சிலர் சமூக வலைதள பக்கங்களுக்காக வீடியோ எடுத்து சக பயணிகளுக்கு தொந்தரவு கொடுப்பதாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்