12 மணி நேரம் சாலையில் உயிருக்கு போராடிய நபர்; 12 ரூபாயையும் விட்டுவைக்காத மக்கள்

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (18:45 IST)
விபத்தில் சிக்கி சாலையில் 12 மணி நேரம் உயிருக்கு போராடிய குமார் என்பவரிடம் திருடிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 
நரேந்திர குமார்(35) என்பவர் ஜெய்ப்பூரில் இருந்து தனது வீட்டுக்கு சென்றுள்ளார். சாலையில் பயணம் செய்யும்போது வேகமாக வந்த கார் ஒன்று அவரை மோதியது. இந்த விபத்து மாலை 5 மணி அளவில் நடைப்பெற்றுள்ளது. கார் மோதியதில் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
 
இதனால் குமார் அந்த இடத்தை விட்டு நகர முடியாமல் சிரமப்பட்டுள்ளார். அந்த வழியே சென்றவர்கள் யாரும் அவருக்கு உதவவில்லை. அதற்கு மாறாக சிலர் அவரிடம் இருந்த பை மற்றும் பர்ஸ் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். மேலும் அவர் பையில் இருந்த 12 ரூபாய் கூட விட்டு வைக்காமல் எடுத்துச் சென்றனர். 
 
இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மனிதநேயம் கேள்வி குறியாகிவிட்டது. 12 மணி நேரம் சாலையில் உயிருக்கு போராடி ஒரு வழியாக தப்பித்தார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.   
அடுத்த கட்டுரையில்