புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றுள்ளார்.
துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் 10 ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. புதிய துணை ஜனாதிபதிக்கான தேர்தலில் பாஜக சார்பில் வெங்கையா நாயுடு மற்றும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் கோபால கிருஷ்ண காந்தியும் போட்டியிட்டனர்.
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பாராளுமன்ற வளாகத்தில் நடபெற்றது. மொத்தம் உள்ள 785 வாக்குகளில் 771 வாக்குகள் பதிவாகின.
மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை முடிவில் வெங்கைய்யா நாய்டு 516 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.