கர்நாடகா-மகாராஷ்டிரா மோதல்: போராட்டம் நடத்திய வாட்டாள் நாகராஜ் கைது!

Webdunia
சனி, 26 நவம்பர் 2022 (15:25 IST)
கடந்த சில தினங்களாக கர்நாடகா-மகாராஷ்டிரா மாநிலங்கள் இடையே எல்லை பிரச்சனை உச்சகட்டத்தை அடைந்து வரும் நிலையில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த வாட்டாள் நாகராஜ் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கர்நாடகாவில் மகாராஷ்டிரா பேருந்துகள் மீது "பெலகாவி எங்களது" என ஸ்டிக்கர் ஒட்டி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  மகாராஷ்டிரா மாநில அரசுக்கு எதிராக பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்திய வாட்டால் நாகராஜை போலீஸ்கைது செய்தது 
 
கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெலகாவி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 862 கிராமங்களை, மகாராஷ்டிரா அரசு உரிமை கோரி வரும் விவகாரத்தில் இரு மாநிலத்தின் இடையே கடந்த 2 நாட்களாக மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்