தடுப்பூசி முன்பதிவு..இணையசேவை முடக்கம் ..மக்கள் அவதி

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (16:47 IST)
இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான முன்பதிவு இன்று தொடங்கி நிலையில் ஒரே நேரத்தில் பலரும் முயன்றதால் இணையம் முடங்கியது.
 

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் மே 1 முதல் இந்தியா முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 18 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்கூட்டியே ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவு தொடங்கும் நிலையில் அரசின் www.cowin.gov.in என்ற தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில் கோவின் தளத்தை ஒரே நேரத்தில் பல லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்த முயன்றதால் பல இடங்களில் இணையதள சேவை முடங்கியது. இதனால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு துரிதமாகச் செயல்பட்ட வேண்டுமெனக் கோரிக்கை வலுத்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்