சிவசேனா கட்சி, சின்னம்.. உச்சநீதிமன்றம் செல்லும் உத்தவ் தாக்கரே..!

திங்கள், 20 பிப்ரவரி 2023 (11:49 IST)
சிவசேனா கட்சி சின்னம் குறித்த தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உத்தவ்தேவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்த ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா கட்சியின் சின்னம் மற்றும் கட்சியின் பெயர் தனக்குரியது என வாதாடினார். இது குறித்து சமீபத்தில் முடிவை தெரிவித்த தேர்தல் ஆணையம் ஏக்நாத் ஷிண்டே தரப்பிலான கட்சியே உண்மையான சிவசேனா என்றும் அக்கட்சிக்கு வில் அம்பு சின்னம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தது. 
 
இந்த நிலையில் சிவசேனா கட்சியாக ஏக்நாத் ஷிண்டே பிரிவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தேவ் தாக்கரே தரப்பில்  முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்