ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்...காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கமல் பிரச்சாரம்..!

ஞாயிறு, 19 பிப்ரவரி 2023 (16:40 IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்...காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கமல் பிரச்சாரம்..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற இருப்பதை அடுத்து திமுக அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். 
 
முதலமைச்சர் மு க ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் விரைவில் பிரச்சாரம் செய்ய உள்ளனர். அது மட்டுமின்றி ஏற்கனவே 13 அமைச்சர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர ஓட்டு வேட்டை ஆடி வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் உலக நாயகன் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான  கமல்ஹாசன் இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன் அவர்களுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு வருகிறார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்