அதிக ரேஷன் வேணும்னா அதிக குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்! – முதல்வர் சர்ச்சை பேச்சு!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (10:56 IST)
உத்தரகாண்ட் மாநில புதிய முதல்வராக பொறுப்பேற்ற தீரத் சிங் ராவத் பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் த்ரிவேந்திர சிங் ராவத் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய முதல்வராக பதவியேற்றவர் தீரத் சிங் ராவத். சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் போதிய அளவு கிடைக்கவில்லை என அவரிடம் மக்கள் புகார் வைத்தனர்.

அதற்கு பதிலளித்து பேசிய தீரத் சிங் “ஊரடங்கு காலத்தில் ஒரு நபருக்கு 5 கிலோ என கணக்கிட்டு குடும்பங்கள்தோறும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன. குறைவான ஆட்கள் உள்ள குடும்பத்திற்கு குறைந்த அளவு ரேசனே கிடைக்கும். அதிக ரேஷன் வேண்டுமென்றால் 2 குழந்தைகளுக்கு பதிலாக 20 குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்” என பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்