எஸ்சி,எஸ்டி இட ஒதுக்கீடு ரத்து: உபி முதல்வர் யோகியின் அடுத்த அதிரடி

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2017 (22:01 IST)
உத்தரபிரதேச மாநில முதல்வர் பதவியேற்றதில் இருந்து நாளொரு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவரது அதிரடி நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தாலும் பெரும்பாலான பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதனால் உபியில் யோகிக்கு புகழ் அதிகரித்து வருகிறது.



 


இந்த நிலையில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அளிக்கப்பட்ட எஸ்சி,எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்து அம்மாநில முதல்வர் யோகி உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தின் மேம்பாட்டிற்காகவும், ஊழலை ஒழித்து கட்டவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உபி அரசு தெரிவித்துள்ளது. இந்த இடஓதுக்கீடு சமாஜ்வாதி ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பள்ளிகளிலும் பல மாற்றங்களை உபி அரசு கொண்டு வந்துள்ளது. அதாவது ஏற்கனவே 6ஆம் வகுப்பில் இருந்து ஆங்கில வகுப்புகள் கற்றுக்கொடுக்கப்பட்டு வரும் நிலையில் வரும் கல்வியாண்டு முதல்  நர்சரி வகுப்புகளில் இருந்து ஆங்கில மொழியை அறிமுகப்படுத்த அரசு அதிகாரிகளுக்கு மாநில அரசு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்