மாணவர்கள் சீருடையில் தான் கட்டாயம் வரவேண்டும்: கர்நாடக அமைச்சர் அறிவிப்பு!

புதன், 9 பிப்ரவரி 2022 (19:19 IST)
மாணவர்கள் கண்டிப்பாக சீருடையில் தான் வரவேண்டும் என கர்நாடக அமைச்சர் கண்டிப்புடன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த நிலையில் கர்நாடக மாநில அரசின் சீருடை சட்டத்திற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என நீதிபதி அறிவித்தார்
 
 இதனை அடுத்து மாணவர்கள் கண்டிப்பாக சீருடையில் தான் வரவேண்டும் என கர்நாடக கல்வி அமைச்சர் நாகேஷ் கூறியுள்ளார். ஆடை கட்டுப்பாடு தொடர்பாக மாணவர்களுக்கு இடைக்கால நீக்கம் வழங்க நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே அரசு அறிவிப்பு தொடர்ந்து இருக்கும் என்றும் மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்ல சீருடை கட்டாயம் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்