ஒரே சீருடை சட்டத்துக்கு தடையில்லை: ஹிஜாப் வழக்கில் முக்கிய உத்தரவு

புதன், 9 பிப்ரவரி 2022 (16:14 IST)
ஒரே சீருடை சட்டத்துக்கு தடையில்லை: ஹிஜாப் வழக்கில் முக்கிய உத்தரவு
ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் சற்று முன்னர் ஒரே சீருடை சட்டத்திற்கு தடை இல்லை என உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு நிலையில் இதுகுறித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மாணவிகள் தரப்பிலிருந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது
 
இந்த வழக்கின் விசாரணையில் கர்நாடக அரசின் ஒரே சீருடையை திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
ஆனால் அதே நேரத்தில் ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சினையை உயர்நீதிமன்றத்தின் விரிவான அமர்வு விசாரிக்கும் என்றும் நீதிபதி கிருஷ்ணா தெரிவித்துள்ளார். எனவே இந்த பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்