அடிக்கிற அடியில.. பயங்கரவாதிகள் மண்ணோடு மண்ணாவார்கள்! - பிரதமர் மோடி கர்ஜனை!

Prasanth Karthick

வியாழன், 24 ஏப்ரல் 2025 (14:25 IST)

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து முதன்முறையாக பேசியுள்ள பிரதமர் மோடி பயங்கரவாதிகளுக்கு பெரும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

 

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தாமல் இருக்கும் பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ள இந்திய அரசு, பயங்கரவாதிகளை கண்டறிந்து அழிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது.

 

பீகாரில் பேசிய பிரதமர் மோடி “காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள், தாக்குதல் நடத்தியவர்கள், அவர்களுக்கு சதி செய்து உதவியவர்களுக்கு கற்பனை செய்ய முடியாத அளவுக்கான தண்டனை உறுதியாக கிடைக்கும். பயங்கரவாதிகள் மண்ணோடு மண்ணாகும் காலம் வந்துவிட்டது. பயங்கரவாதிகளை இருந்த இடம் தெரியாமல் ஆக்கப் போகிறோம்” எனக் கூறியுள்ளார்.
 

மேலும் இந்திய ராணுவத்தின் முப்படைகளையும் தயார் நிலைக்கு கொண்டு வர பிரதமர் மோடி தெரிவித்துள்ள நிலையில், விரைவில் மிகப்பெரிய அளவில் பதிலடி தாக்குதலை இந்திய ராணுவம் மேற்கொள்ள உள்ளது என பேசிக்கொள்ளப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்