நடிகைகளை அடுத்து திருநங்கை பாலியல் புகார்.. கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு மேலும் சிக்கல்..!

Siva

வெள்ளி, 22 ஆகஸ்ட் 2025 (12:05 IST)
கேரளாவின் பாலாக்காடு சட்டமன்ற உறுப்பினர் ராகுல் மாம்கூட்டத்திலுக்கு எதிராக ஒரு திருநங்கை பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். தன்னை பாலியல் வன்புணர்வு செய்ய விரும்புவதாக மாம்கூட்டத்திலிடமிருந்து தனக்கு குறுஞ்செய்திகள் வந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
 
அவந்திகா என்ற அந்த திருநங்கை, ராகுல் மாம்கூட்டத்திலுடன் ஒரு தேர்தல் விவாதத்தில் முதலில் சந்தித்ததாகவும், அது சாதாரண நட்பாக தொடங்கியதாகவும் கூறினார். ஆனால், சமூக ஊடகங்களில் வந்த குறுஞ்செய்திகள், அந்த நட்பை ஒரு "அருவருப்பான அனுபவமாக" மாற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.
 
ஏற்கனவே மலையாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் மற்றும் எழுத்தாளர் ஹனி பாஸ்கரன் ஆகியோர் சுமத்திய பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, மாம்கூட்டத்தில் நேற்று கேரள இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
 
ஆனால் சமூகத்தை பாதுகாப்பதற்காக அவர் எம்.எல்.ஏ. பதவியிலிருந்தும் விலகுவது முக்கியம்" என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்