பாஜகவை கழட்டிவிட்ட சிவசேனா: முதல்வர் பதவிக்கு உத்தவ் தாக்கரே!

Webdunia
திங்கள், 11 நவம்பர் 2019 (12:41 IST)
மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி முறிவை தொடந்து தேசியவாத காங்கிரஸ் சிவசேனாவுடன் கூட்டணி வைத்துள்ளது.

மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் பாஜக 105 இடங்களும், சிவசேனா 56 இடங்களும், தேசியவாத காங்கிரஸ் 54 மற்றும் காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றிபெற்றன. இந்நிலையில் சிவசேனா ஆட்சியில் இரண்டரை ஆண்டுகளை தங்களுக்கு தரவேண்டும் என கேட்டதால் பாஜகவுடன் முரண்பாடு ஏற்பட்டது.

சிவசேனாவின் கோரிக்கையை பாஜக தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் பாஜகவுடனான கூட்டணியை சிவசேனா முறித்துக் கொண்டது. அதை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி அமைக்கின்றனர்.

அதை தொடர்ந்து மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யரி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை முதல்வராக பொறுப்பேற்க அழைப்பு விடுத்துள்ளார். இரு கட்சிகள் இடையேயான பேச்சு வார்த்தையின்படி உத்தவ் தாக்கரே முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் காங்கிரஸ் கட்சி இந்த கூட்டணியை வெளியில் இருந்து ஆதரிப்பதாகவும், அதற்காக சபாநாயகர் பதவி அவர்களுக்கு கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மராட்டியத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிலைமையை அப்படியே தலைகீழாக மாற்றி சிவசேனா ஆட்சிக்கு வர இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்