ராமர் கோவிலுக்கு ஏப்ரல் மாதம் அடிக்கல்..

Arun Prasath

ஞாயிறு, 10 நவம்பர் 2019 (14:27 IST)
அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோவிலுக்கு வருகிற ஏப்ரல் மாதம் அடிக்கல் நடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததோடு, மசூதி கட்டுவதற்கு இஸ்லாமியர்களுக்கு அவர்கள் விருப்பப்பட்ட இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும் உத்திர பிரதேச மாநில அரசுக்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் ராம நவமி ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படுவதால் அம்மாதத்திலேயே ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்ட விஷ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகள் தீவிரம் காட்டிவருவதாக கூறப்படுகிறது.

முன்னதாகவே ராமஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில், ராமர் கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்துவரும் நிலையில், இதற்கான பணிமனையை அயோத்தியின் கர சேவகபுரம் என்ற பகுதியில் அமைத்துள்ளனர். ஏற்கனவே ராமர் கோவிலின் தூண்கள் 50% செதுக்கப்பட்டு  விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் உத்தர பிரதேசத்தில் 2020 ஆம் ஆண்டு சட்டபேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், அதற்குள் மத்திய அரசு கோவிலை கட்டிமுடித்துவிட வேண்டும் எனவும் ஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகள் எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்