ஓரினச் சேர்க்கையால் இரு சகோதரிகள் திருமணம் ! வைரல் புகைப்படம்

Webdunia
வியாழன், 4 ஜூலை 2019 (18:54 IST)
கடந்த வருடம் நம்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் ஓரின சேர்க்கையை அங்கீகரித்து தீர்ப்பு வெளியானது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் சகோதர உறவுமுறை கொண்ட இரு பெண்கள்  ஒரின ஈர்ப்பால் திருமணம் செய்ய முடிவு செய்துள்ள நிலையில், அவர்கள் வீட்டார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பையும் மீறு இரு பெண்ளும் திருமணம் செய்துகொண்டனர். தங்கள் புகைப்படத்தையும் அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவுசெய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் ரொஹான்யா பகுதியில் வசித்து வரும் இரு பெண்கள், அங்குள்ள சிவன் கோவிலுக்குச் சென்று  அங்கிருந்த புரோகிதர்களிடம் தங்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைக்குமாறு கூறியுள்ளனர்.
 
இதைக்கேட்டு  திகைத்துப் போன கோயில் அர்ச்சகர், இதற்கு மறுத்ததாகத் தெரிகிறது. ஆனால் பெண்கள் தாங்கள் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்துள்ளனர். பின்னர் இதுகுறித்த செய்திகள் நாலா பக்கமும் பரவியதை அடுத்து சிவன் கோவிலில் மக்கள் கூடினர்.
 
அதற்குள் திருமண செய்து கொண்டு கோவிலை விட்டு வெளியேறினர். இந்நிலையில் வாரணாசியில் உள்ள சிவன் கோவிலில் திருமணம் செய்துகொண்ட முதல் ஓரினச் சேர்க்கையாளர்கள் இந்த சகோதரிகள் தான் என்று தகவல்க: தெரிவிக்கின்றன.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்