நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசியில் போட்டியிட்டு 4.80 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அமைச்சரவை கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து முடித்த நரேந்திர மோடி இன்று தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார்.