ட்விட்டரில் எகிறும் எலெக்‌ஷன் ஹேஷ்டேகுகள் - அதிர்ச்சியில் டிவிட்டர்

புதன், 22 மே 2019 (13:45 IST)
மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை (மே 23) வெளியாகவிருக்கும் நிலையில் நாளுக்கு நாள் தேர்தல் சம்பந்தமான ஹேஷ்டேகுகள் அதிகமாக பகிரப்பட்டு வருவதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 45.6 மில்லியன் (4 கோடியே 50 லட்சம்) ஹேஷ்டேகுகள் தேர்தல் சம்பந்தமாக பதிவாகி உள்ளதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆரம்பித்த முதல் நாள் அன்று 1.2மில்லியன் (சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட) ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் பதிவாகி வைரலாகி உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் எக்ஸிட் போல் வெளியான அன்று 24 மணி நேரத்தில் 5 லட்சத்து 60 ஆயிரம் ஹேஷ்டேக்குகள் எக்ஸிட் போல் சம்பந்தமாக பதிவிடப்பட்டுள்ளன. நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கும் சூழலில் இது இன்னும் அதிகரிக்கும் என ட்விட்டர் நிறுவனம்  தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்