மறுபடியும் தேர்தலா? பாஜக கிளப்பும் புது பிரச்சனை

திங்கள், 20 மே 2019 (16:51 IST)
பாஜகவினர் மேற்கு வங்கத்தில் மறுதேர்தல் நடத்தவேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர். 
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முடிந்து இன்னும் மூன்று நாட்களில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் மீதும் வாக்காளர்கள் மீதும் பல இடங்களில் தாக்குதல்கள் நடந்துள்ளன. எனவே மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என பாஜக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடைசிகட்டமாக நேற்று நடைபெற்ற தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவினருக்கும், திரிணாமூல் காங்கிரஸாருக்குமிடையே பல இடங்களில் மோதல்கள் வெடித்தன. இதில் பாஜக வேட்பாளர் பபுல் சுப்ரியோவும், அவரோடு சென்ற தொண்டர்களும் தாக்கப்பட்டனர்.

அதேபோல ராகுல் சின்ஹா, அனுபம் ஹஸ்ரா, நிலஞ்சன் ராய் உள்ளிட்ட பாஜக வேட்பாளர்கள் பயணித்த வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பாஜகவினர் அதிகம் தாக்கப்பட்ட மேற்கு வங்கத்தில் மறுதேர்தல் நடத்தவேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் “தேர்தல் ஆணையரை சந்தித்து பாஜக தொண்டர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்த முழுமையான தகவல்களை தந்துள்ளோம். 7வது மற்றும் முந்தைய கட்ட தேர்தலகளிலும் வன்முறை நடந்த தொகுதிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தவேண்டும். குறிப்பாக மேற்கு வங்கத்தில் நியாயமான முறையில் மறுதேர்தல் நடத்தவேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்