நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்க முயற்சி..! ராகுல் காந்தி மிகவும் ஆபத்தானவர்.! கங்கனா ரனாவத்..!

Senthil Velan
திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (12:13 IST)
நாட்டின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க முயற்சிக்கும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி  மிகவும் ஆபத்தான மனிதர் என்று நடிகையும், இமாச்சல பிரதேச எம்.பியுமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர். விஷமி. அழிவுகரமானவர். அவரால் பிரதமராக முடியாவிட்டால் இந்த தேசத்தை அழித்துவிடலாம் என்பதே அவரது செயல்திட்டமாக உள்ளது.  
 
நமது பங்குச் சந்தையை குறிவைத்து வெளியிடப்பட்ட ஹிண்டன்பெர்க் அறிக்கை, ராகுல் காந்தி ஆதரவுடன் வெளியானது என்பது நேற்றிரவு உறுதியானது. இந்த தேசத்தின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க ராகுல் காந்தி எல்லா முயற்சிகளையும் செய்கிறார். 

ALSO READ: தங்கலான் படத்திற்கு சிக்கலா.? ரூ.1 கோடி டெபாசிட் செய்ய தயாரிப்பாளருக்கு பறந்து உத்தரவு.!
 
ராகுல் காந்தி அவர்களே, உங்கள் வாழ்நாள் முழுவதும் எதிர்க்கட்சியில் அமர தயாராகுங்கள். நாட்டு மக்கள் உங்களை ஒருபோதும் பிரதமராக்க மாட்டார்கள். நீங்கள் ஓர் அவமானம் என்று கங்கனா ரனாவத் கடுமையாக சாடியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்