ஓம் ட்ரம்பாய நமக!...ட்ரம்பிற்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி
வியாழன், 20 ஜூன் 2019 (13:18 IST)
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பிற்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி, வியப்பில் கிராம மக்கள்.
கடந்த 2017 ஆம் ஆண்டு டொனால்ட் டரம்ப், அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து “அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்றும், வெளிநட்டினர் எல்லாம் அவரது நாடுக்கே திரும்ப செல்லுங்கள்” என்பது போன்ற பல இனவாத பேச்சுக்களால் சர்ச்சைக்கு உள்ளாகினார்.
தற்போது இந்தியா-அமெரிக்காவிற்கு இடையே வர்த்தகரீதியிலான மோதலும் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஜங்கோன் மாவட்டம் கொன்னே கிராமத்தைச் சேர்ந்த புஸ்சா கிருஷ்ணா என்ற விவசாயி ஒருவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பிற்கு சிலை வைத்துள்ள செய்தி அப்பகுதி மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப்பிற்கு 6 அடி உயர சிலையை வைத்த புஸ்சா, அந்த சிலைக்கு, கடவுள் போல தினமும் பல பூஜைகள் செய்து தொழுது வருகிறார்.
மேலும் ட்ரம்ப் சிலையின் நெற்றியில் பொட்டும் வைத்து மாலை அணிவித்து ஆரத்தி எடுக்கிறார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு சிலை வைத்ததற்கான காரணத்தை கேட்டதற்கு புஸ்சா, ட்ரம்ப் ஒரு வலிமையானத் தலைவர் என்றும், அவரின் துணிச்சலான செயல்பாடு தனக்கு பிடித்திருப்பதால் அவரை கடவுளாக தினமும் வழிபடுகிறேன் என்றும் பதில் கூறியுள்ளார்.
மேலும் ட்ரம்ப் சிலை அமைக்க புஸ்சா, ரூ.1 லட்சத்தி 30 ஆயிரம் செலவு செய்வதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.