இரு நாட்டு அதிபர்கள் இணைந்து நட்ட மரன்கன்று.. என்ன ஆனது தெரியுமா ?

திங்கள், 10 ஜூன் 2019 (21:18 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,  பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகிய இரு நாட்டு அதிபர்கள் இணைந்துநட்ட கருவாலி மரக்கன்று தற்போது பட்டுப்போய்விட்டதாகத் தகவல்கள்  தெரிவிக்கின்றன.
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு வருகை தந்தார் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான். அப்போது அவர் பிரான்ஸில் முதலாம் உலகப்போரில் இறந்த அமெரிக்கர்களின் கல்லறையிலிருந்து கருவாலை மரக்க்கன்று ஒன்றை கையோடு எடுத்துவந்திருந்தார். 
 
அதாவது இக்கன்றை அமெரிக்காவில் நட்டு இருநாடுகளின் நட்புறவை வெளிக்காட்டுவதாக அதுஇருக்கும் என்று நினைத்து டிரம்ப் மற்றும் மேக்ரான் ஆகிய இருவரும்  வெள்ளை மாளிகைப்பகுதியில் அதை நட்டனர்.அக்கன்று உலகமெங்கும் கவனத்தை ஈர்த்தது.
 
ஆனால் தற்பொழுது அக்கன்று பட்டுப்போய் விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.சரியாக அக்கன்றைப் பராமரிக்காமல் போனதே அதற்குக்காரணம் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்