டிரம்புக்காக வைத்த அலங்கார வளைவு சரிந்தது: பெரும் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 23 பிப்ரவரி 2020 (17:30 IST)
டிரம்புக்காக வைத்த அலங்கார வளைவு சரிந்தது
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கு வருகை தரவுள்ள வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நாளை நடைபெற உள்ளதை அடுத்து இந்தியாவில் அவரை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத்தில் டிரம்பை வரவேற்க வைத்த அலங்கார வளைவு ஒன்று திடீரென பலத்த காற்றினால் சரிந்து விழுந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
 
குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத்தில் மோடி மற்றும் டிரம்ப் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி ஒன்றில் நடைபெற உள்ளது. மேலும் அங்கு உள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் இருவரும் செல்ல இருப்பதாக பயணத் திட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் சபர்மதி ஆசிரமத்திற்கு செல்லும் வழியில் டிரம்ப் மற்றும் மோடியை வரவேற்க பல்வேறு அலங்கார வளைவுகள், இந்திய அமெரிக்க கொடிகள் மற்றும் போஸ்டர்கள், பேனர்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன
 
இந்த நிலையில் முக்கிய சாலை ஒன்றில் வைக்கப்பட்ட அலங்கார வளைவு திடீரென அடித்த பலத்த காற்றின் காரணமாக சரிந்து விழுந்தது. இந்த அலங்கார வளைவு சரிந்து விழுந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, எந்தவித அசம்பாவிதமும் நிகழவில்லை. இருந்தும் இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் உடனடியாக அந்த பகுதிக்கு வந்ததும் அலங்கார வளைவை சரிசெய்யும் முயற்சியில் அவசர அவசரமாக ஈடுபட்டுள்ளனர். நாளை காலை அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு வரவிருக்கும் நிலையில் இன்று அவருக்காக வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு ஒன்று சரிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்