சாலையோர உணவகத்தில் லாரி நுழைந்து விபத்து -10 பேர் பலி, 20 பேர் படுகாயம்

செவ்வாய், 4 ஜூலை 2023 (20:30 IST)
மஹாராஷ்டிர    மாநிலம் மும்பை – ஆக்ரா இடையே நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பை- ஆக்ரா நெடுஞ்சாலலையில் இன்று டிரக் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர உணவகத்தில் நுழைந்தது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

இந்தக் கோர விபத்து பற்றி காவல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:  

மத்திய பிரதேசத்தில் இருந்து துலே நோக்கி இந்த டிரக் சென்று கொண்டிருக்கும்போது, டிரக்கின் பிரேக் செயலிழந்ததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, ஒய்ரரண்டு மோட்டார் சைக்கிள்கள், கார் மற்றும்  இன்னொரு லாரியின் மீது மோதியதுடன்   உணவகத்தில் நுழைந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று தெரிவித்தார். மேலும்,  இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தெரிவித்தார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்