#ChidambaramMissing: லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்த சிபிஐ!

புதன், 21 ஆகஸ்ட் 2019 (12:01 IST)
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக விமான நிலையங்களில் சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 
 
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஜாமீன் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. 
 
இதனைடுத்து ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது. இந்நிலையில் ப.சிதம்பரம் தற்போது எங்கே இருக்கின்றார் என்று தெரியாத நிலையில் இன்று அவருடைய முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 
உச்சநீதிமன்றம் இது குறித்து உடனடியாக உத்தரவு பிறப்பிக்க மறுப்பு தெரிவித்த நிலையில், ப.சிதம்பரத்தை எப்போது வேண்டுமானாலும் கைது செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. இதனிடையே முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது லுக் அவுட் நோட்டீஸ் சிபிஐ தரப்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
இதனால் ப.சிதம்பரம் விமானம் மூலம் வெளிநாட்டிற்கு தப்பித்து செல்ல இயலாது. அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்த எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ப.சிதம்பரம் எங்கு உள்ளார் என தெரியாத நிலையில் சமூக வலைத்தளமான டிவிட்டரில் #ChidambaramMissing என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது கூடுதல் தகவல். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்