அரசு வேலைக்கு பதில் மாடு மேய்த்து சம்பாதிக்கலாம்: சர்ச்சை கருத்து கூறிய முதல்வர்

ஞாயிறு, 29 ஏப்ரல் 2018 (11:06 IST)
கடந்த சில நாட்களாகவே சர்ச்சைக்குரிய கருத்துக்களை திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் கூறி வருவது தெரிந்ததே.
 
மகாபாரத காலத்திலேயே இணையவசதி இருந்தது என்றும், டயானா ஹைடன் உலக அழகிக்கு தகுதியில்லாதவர் என்றும், எஞ்சினியர்கள் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத கூடாது என்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தவர் தான் திரிபுரா முதல்வர்
 
இந்த நிலையில் இன்று கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் பேசிய திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப், 'இளைஞர்கள் அரசு வேலைக்காக அரசியல்கட்சிகளின் பின் செல்வதற்கு பதிலாக, பான் கடை வைத்தோ அல்லது மாடு வளர்த்து பால் கறந்தோ சம்பாதிக்கலாம் என்றும் கூறியுள்ளார். 
 
பான் கடை வைத்தோ அல்லது மாடு வளர்த்து பால் கறந்தோ சம்பாதிக்க எதற்காக நாங்கள் கஷ்டப்பட்டு பல வருடங்கள் படிக்க வேண்டும் என்றும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க இயலாதவர்கள் பேசும் பொறுப்பற்ற பேச்சு இது என்றும் திரிபுரா முதல்வரின் இந்த கருத்துக்கு மாணவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்