இவருக்கெல்லாம் எப்படி உலக அழகி பட்டம் கிடைச்சது! முதல்வரின் சர்ச்சை பேச்சு

வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (13:57 IST)
கடந்த 1997ஆம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த டயானா ஹைடன் என்பவர் உலக அழகி பட்டத்தை வென்றார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் உலக அழகி பட்டம் வென்று சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் இவருக்கு கிடைத்த பட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை திரிபுரா முதல்வர் பிப்லக் தேப் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
சமீபத்தில் நடந்த திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தலில் 25 ஆண்டுகள் பதவியில் இருந்த கம்யூனிஸ்ட் ஆட்சியை கீழே இறக்கி பாஜக வெற்றி பெற்றது. இம்மாநில முதல்வராக பிப்லக் தேப் என்பவர் பதவியேற்று கொண்டார்.
 
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் பிப்லக் கூறியதாவது: உலக அழகிப்போட்டியில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக இந்தியப் பெண்கள் முடிசூடப்பட்டார்கள். மிஸ் வோர்ல்டு, மிஸ் யுனிவர்ஸ் ஆகிய பட்டங்கள் இந்திய பெண்களுக்கு கிடைத்தன. எந்த இந்திய பெண்கள் பங்கேற்று இருந்தாலும் கிடைத்திருக்கும். டயானா ஹைடன் கூடப் பங்கேற்று உலக அழகிப்பட்டம் பெற்றுவிட்டார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.  ஐஸ்வர்யாராய்க்கு உலக அழகி பட்டம் கொடுத்தார்கள் என்றால் அதில் ஒரு நியாயம் உள்ளது. டயானா ஹைடனுக்கு உலக அழகிப்பட்டம் எதற்கு கொடுத்தார்கள் என்றே தெரியவில்லை என்று சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார். 
 
இவர்தான் கடந்த சில நாட்களுக்கு முன் மகாபாராதம் காலத்திலேயே, இண்டர்நெட் கண்டுபிடிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று பேசி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்