ஒரு கவுன்சிலரை கூட உங்களால் இழுக்க முடியாது! மோடிக்கு மம்தா கட்சி சவால்

Webdunia
செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (08:09 IST)
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 40 எம்.எல்.ஏக்கள் தங்கள் தொடர்பில் இருப்பதாக தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எங்கள் கட்சியின் ஒரு கவுன்சிலரை கூட உங்களால் இழுக்க முடியாது என மம்தா பானர்ஜி கட்சியினர் சவால் விடுத்துள்ளனர்ர்.
 
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஸ்ரீராம்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, 'மேற்குவங்கத்தில் விரைவில் தாமரை மலரும் என்றும் அதற்கு திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் மம்தா பானர்ஜியை விட்டு விலகி வருவார்கள் என்றும், தற்போது கூட, அக்கட்சியை சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் தம்மிடம் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்
 
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று செய்தியாளர்களிடையே பேசிய திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், எம்.பியுமான டெரெக் ஓ பிரையன், 'பாஜகவுக்கு அந்திம காலம் நெருங்கிவிட்டது. திரிணமுல் கட்சியை சேர்ந்த ஒரு கவுன்சிலர் கூட, பாஜகவால் தங்கள் பக்கம் இழுக்க முடியாது. பிரதமர் தேர்தல் பரப்புரை நடத்த வந்தாரா? அல்லது குதிரை பேரம் நடத்தி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க வந்தாரா? எனத் தெரியவில்லை. ஆட்சி அமைக்க பிரதமர் குதிரை பேரம் நடத்த முயல்வதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப் போகிறேன்' என  தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்