ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க முடியாத கோபத்தில் மேலாடையை கழற்றி எறிந்த திருநங்கை

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2016 (16:18 IST)
ஏ.டி.எம் வரிசையில் நிற்க முடியாத திருநங்கை, தனது மேலாடையை கழற்றி எறிந்த விவகாரம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து, புதிய நோட்டுகளை பெற, இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். 
 
இந்நிலையில், டெல்லியில் உள்ள சாந்தி சவுன், மயூர் விஹார் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க வந்திருந்த ஒரு திருநங்கை, திடீரென கோபமடைந்து, தனது மேலாடையை கழற்றி எறிந்தார்.
 
இதைக்கண்டு அதிரச்சியடந்த ஏ.டி.எம் காவலாளி, உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து, அங்கு வந்த ஒரு பெண் போலீஸ் அதிகாரி, அவரது மேலாடையை அணிய வைத்து, அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தார்.
 
ஆண்கள் மற்றும் பெண்கள் இரு வரிசையிலும் தன்னை நிற்க யாரும் அனுமதிக்கவில்லை என அவர் கூறினார். இதனையடுத்து, அருகில் இருந்த ஏ.டி.எம் மையத்திற்கு அழைத்து சென்ற போலீசார், வரிசையில் நிற்காமல் அவர் பணம் எடுக்க உதவி செய்தனர்.
 
இந்த விவகாரம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அடுத்த கட்டுரையில்