திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு செல்வதற்காக காத்திருந்த சிறுவன் எதிர்பாராத விதமாக படிக்கட்டில் இருந்த கிரில் இடைவெளி வழியாக கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா என்ற பகுதியைச் சேர்ந்த சின்னசோவ் என்ற கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் நேற்று தங்கள் இரண்டு மகன்களுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றனர்.
கோவில் அருகே உள்ள பத்மநாப நிலைய கட்டிடத்தில் அவர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர். அப்போது அவர்களுடைய இரண்டு மகன்களும் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், படிக்கட்டில் இருந்த கிரில் வழியாக மூன்று வயது மகன் தவறி கீழே விழுந்து அதில் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த சிறுவன் உயிருக்கு போராடிய நிலையில் சிறிது நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே இறந்ததாக தெரிகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையனை குடும்பத்துடன் தரிசிக்க வந்த தம்பதியினர் தங்களுடைய ஒரு குழந்தையை இழந்து தவித்த பரிதாபமான காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.