உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா என்ற பகுதியில் நேற்று மதியம் மூன்று மணி அளவில், 3 வயது குழந்தை தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அங்கு வந்த ஆறுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அந்த குழந்தையை கடித்து, இழுத்துச் சென்றது. இதன் நேரில் கண்ட அங்குள்ள பொதுமக்கள் உடனடியாக அந்த நாய்களை குச்சிகளால் அடித்து விரட்டினர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து உள்ள நிலையில், தெரு நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தவறிவிட்டது என்றும், மாநகராட்சி நிர்வாகத்திற்கு எத்தனையோ முறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த பகுதி மக்கள் குற்றம் காட்டி வருகின்றனர். இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.