இந்நிலையில், தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து 4 நாட்களில் விலகும் நிலையில் கிழக்கு மற்றும் வட கிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும். அதனால் வட கிழக்கு பருவமழை நாளை அல்லது மறுநாள் (15 அல்லது 16ம் தேதி) தொடங்கும். அதன் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும். அதற்கடுத்த 2 நாட்களுக்கும் மழை நீடிக்கும். 17ம் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டெல்டா, கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனால் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.