2வது நாளாகவும் 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்!

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (10:20 IST)
வாரத்தின் முதல் நாளான நேற்று பங்கு சந்தை சரிந்த நிலையில் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் சுமார் 500 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இன்று காலை மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய உடன் அறிந்து 519 புள்ளிகள் சரிந்து 55, 155 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி சுமார் 150 புள்ளிகள் குறைந்து 16 ஆயிரத்து 420 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
பங்குசந்தை மேலும் சரிய வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுவதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்