2வது நாளாக உயர்ந்த பங்குச்சந்தை: 55 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்
வெள்ளி, 27 மே 2022 (09:43 IST)
பங்குச்சந்தை நேற்று சுமார் 500 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்த நிலையில் இன்றும் 500 புள்ளிகள் உயர்ந்ததால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது
தொடர்ச்சியாக இரண்டு நாள் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
இன்று பங்குச்சந்தை தொடங்கியதும் சுமார் 500 புள்ளிகள் உயர்ந்து தற்போது 54 ஆயிரத்து 740 என்ற புள்ளியில் விற்பனைக்கு வருகிறது. இன்று அனேகமாக 55 ஆயிரத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 150 புள்ளிகள் 16300 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது பங்குச் சந்தை ஏற்றம் கண்டது அதில் முதலீடு செய்தவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது