15ம் தேதி முதல் நேரில் இலவச தரிசன டிக்கெட்டுகள்?! – தேவஸ்தானம் ஆலோசனை!

Webdunia
ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (09:04 IST)
திருப்பதியில் பிப்ரவரி 15 முதல் இலவச தரிசனத்திற்கு நேரில் டிக்கெட் அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு நாடு முழுவதிலிருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசனத்திற்காக வருகை புரிகின்றனர். பக்தர்களுக்கு சிறப்பு தரிசன டிக்கெட், இலவச தரிசன டிக்கெட் உள்ளிட்டவற்றை திருப்பதி தேவஸ்தானம் வழங்கி வருகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து டிக்கெட்டுகளும் ஆன்லைன் வழியாகவே வழங்கப்பட்டு வருகின்றன. இலவச தரிசன டிக்கெட்டும் பிப்ரவரி 15ம் தேதி வரைக்குமான டிக்கெட்டுகள் முன்னதாகவே ஆன்லைனில் வெளியாகி விற்று தீர்ந்தது.

இந்நிலையில் தற்போது கொரோனா குறைய தொடங்கியுள்ளதால் இலவச தரிசன டிக்கெட்டுகளை வழக்கம்போல நேரிலேயே வழங்குவது குறித்து தேவஸ்தானம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்