திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கொண்டாடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறும். ஒன்று செப்டம்பர் மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழா, இரண்டாவது நவராத்திரி பிரம்மோற்சவ விழா.
ஏற்கனவே செப்டம்பர் மாத புரட்டாசி பிரமோற்சவ விழா முடிவடைந்த நிலையில் இன்று முதல் அதாவது அக்டோபர் 15ஆம் தேதி முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது
ஆகம விதிகளின்படி பிரம்மோற்சவ விழா நடைபெறும் என்றும் ஏழுமலையானின் சேனாதிபதி நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்படுவார் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
வரும் 22ஆம் தேதி காலை 8 மணி முதல் 10 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை வாகன சேவையில் நடைபெற உள்ளதாகவும் 23ஆம் தேதி காலை 6 மணிக்கு சங்கரா ஸ்நானம் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது