கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கங்கை ஆற்றில் தூக்கி போடுவதாக கடந்த சில நாட்களாக பெரும் சர்ச்சைகள் இருந்த நிலையில் தற்போது இது குறித்த வீடியோ ஒன்று வைரலானதால் இருவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பல்ராம்பூர் என்ற மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் உடலை பிபிஈ அணிந்த ஒருவரும் மற்றொருவரும் ஆற்று பாலத்தில் இருந்து ஆற்றில் தூக்கி வீசிய காட்சியை காரில் சென்ற ஒருவர் கேமராவில் பதிவு செய்துள்ளார்
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட உடலை கைப்பற்றி விட்டதாகவும் அந்த உடலுக்கு உரியவர் கடந்த 25ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு 28ஆம் தேதி உயிரிழந்தார் என்றும் இதனை அடுத்து அவரது குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்வதற்கு பதிலாக ஆற்றில் தூக்கி வீசி உள்ளனர் என்றும் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து ஆற்றில் உடலை தூக்கி வீசிய இருவரை போலீசார் கைது செய்தனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது