பிரபல சினிமா கலைஞர் கொரோனாவால் மரணம்

செவ்வாய், 18 மே 2021 (21:39 IST)
உலகில் கொரொனா இரண்டாம் கட்ட அலைபரவிவரும் நிலையில் இந்தியாவில் இது கோர தாண்டவம் ஆடிவருகிறது.  எனவே மத்திய் அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட சினிமா கலைஞர்கள் அடுத்தடுத்து மரணத்தை தழுவி வருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று பிரபல சினிமா மேக்கப் கலைஞர் கங்காதர் கொரொனாவால் உயிரிழந்தார்.

இவர் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்களின் படங்களின் மேக்கப் கலைஞராகப் பணியார்றியுள்ளார்.

சில நாட்களுக்கு முன் கொரொனாவால் பாதிக்கப்பட்ட கங்காதர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 அவரது மறைவுக்கு சினிமா நட்சத்திரங்கள் , கலைஞர்கள், மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்