சிறையில் சொகுசு வாழ்க்கை.. கன்னட நடிகர் தர்ஷன் மீது மேலும் 3 வழக்குகள்..!

Mahendran
திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (16:59 IST)
சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த கன்னட நடிகர் தர்ஷன் மீது மேலும் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொலை வழக்கில் சிக்கிய பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டு பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் ரவுடிகளுடன் சேர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதாகவும் செய்திகள் வெளியாகின.

இதையடுத்து பெங்களூரு பார்ப்பன அக்ரஹார ஜெயிலர் உள்பட 7 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது கண்ணன் நடிகர் தர்ஷன் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் தர்ஷன் உள்பட நான்கு பேர்கள் மீது தனித்தனியாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்குகள் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்