கொள்ளையில் சிக்கிய திருடன்; சிறுமியை கடத்தி எஸ்கேப்! – கர்நாடகாவில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (10:54 IST)
கர்நாடகாவில் கொள்ளையடிக்க சென்ற திருடன் சிக்கிக் கொண்டதால் சிறுமியை கடத்தி தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சிக்கோடி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். நேற்று முன்தினம் சுரேஷ் மற்றும் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமி ஒருவன் வீட்டில் இருந்த பொருட்களை திருடியுள்ளான்.

அந்த சமயம் சுரேஷ் மற்றும் குடும்பத்தினர் கண் விழித்து விட திருடன் தப்ப முயன்றுள்ளான். அதற்குள் சுரேஷ் சத்தம் போட்டதை கேட்டு அக்கம்பக்கத்தினர் சூழ்ந்து விட்டதால் திருடன் தப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடனே சுரேஷ் வீட்டிலிருந்து 11 வயது சிறுமியை கத்தி முனையில் கடத்தி அதை வைத்து மிரட்டி அங்கிருந்து திருடன் தப்பியுள்ளான்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தீவிரமான தேடுதல் வேட்டை நடத்திய போலீஸார் கரகடா என்ற கிராமத்தில் திருடன் கடத்தி வைத்திருந்த சிறுமியை மீட்டதுடன் திருடனையும் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்