ஹனிரோஸை பார்க்க குவிந்த ரசிகர்கள்...வைரலாகும் வீடியோ

சனி, 4 பிப்ரவரி 2023 (19:25 IST)
பிரபல  நடிகை ஹனிரோஸ் இன்று ரசிகர்களிடையே இடையே கூட்டத்தில் சிக்கிக் கொண்டார்.

தமிழ் சினிமாவில் முதல் கனவே, சிங்கம்புலி, மல்லுக்கடு, கந்தர்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஹனிரோஸ்.

இவர், தெலுங்கில், நடிகர் பாகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்த  வீரசிம்ம ரெட்டி படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தெலுங்கு ரசிகர்களிடையே ஹனிரோஸ் பிரபலமானார்.

இந்த நிலையில், இன்று கேரள மாநிலம் மை பியூச்சர் என்ற வீட்டு உபயோகப் பொருட்கள் கடையை திறப்பதற்காக   நடிகை ஹனிரோஸ் இன்று சென்றிருந்தார்.

 ALSO READ: பிரபல நடிகர் கோபாலகிருஷ்ணன் காலமானார் !

அவரைப் பார்க்க ரசிகர்கள் இன்று கடை முன் சூழ்ந்தனர்,. பவுன்சர்கள் நின்றபோதிலும், ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்க முயற்சித்தனர்.

பின்னர், பவுன்சர்களின் உதவியால், அங்கிருந்து வெளியேறி தனது காரில் ஏறிச் சென்றார்.

இந்த வீடியோவை அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது. 

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Honey Rose (@honeyroseinsta)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்