இந்த கொலை வழக்கில், நாலாச்சோப்ரா பெல்கார் பகுதியைச் சேர்ந்த பரன் சாவ் வயது(50) என்பவருக்குத் தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்தனர். அவரை விசாரித்தபோது, இம்ரானின் மனைவிக்கும் அவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதை அறிந்த இம்ரான் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் இருவரும் ஆத்திரமடைந்து இம்ரானை கொலை செய்ய திட்டமிட்டு, இதற்காக, தனது நண்பர்கள் அப்துல் முபாரக் அலி பத்தா ஆகியோரின் உதவியை நாடியுள்ளனர்.
பின்னர், சம்பவ தினத்தன்று, இம்ரானை கடத்திச் சென்று, கொலை செய்துவிட்டு, உடலை விராட் பாலிவாலி கிராமத்தில் வீசிவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவித்துள்ளார்.